செய்தி சில வரிகளில்

வரவேற்புக்குழு கூட்டம்

திண்டுக்கல் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வரவேற்புக்குழு கூட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் ஆக.,13ல் நடக்கவுள்ள நில உரிமைக்கான மாநில மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக சச்சிதானந்தம் எம்.பி., தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகிகள் ராமசாமி, அருள்செல்வன் கலந்துகொண்டனர்.

......

பிரசார இயக்கம்

திண்டுக்கல்: பா.ஜ., அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து சி.ஐ.டி.யு., சார்பில் திண்டுக்கல்லில் ஜுலை 9ல் வேலைநிறுத்தம் நடக்கிறது. இதற்கு ஆதரவு கேட்டு பஸ் ஸ்டாண்ட் முன்பு பிரசார இயக்கம் நடந்தது.

........

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திருப்புவனம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதிக்கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement