கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா நாளை துவக்கம்

பெரியகுளம்: கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபடுகின்றனர்.

பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களை வழங்கும் ஆயிரம் கண்ணுடையாளாக அம்மன் திகழ்கிறார். இக் கோயிலில் ஜூலை 1 ல் கம்பம் நடப்பட்டது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். நாளை (ஜூலை 7ல்) கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா துவங்குகிறது. திருவிழாவில் தினமும் இரவு அம்மன் சிம்மம், குதிரை, ரிஷபம், அன்னபட்ஷி, யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார். ஜூலை 15ல் மாவிளக்கு, ஜூலை 16ல் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் அம்மனை வழிபடுவர். ஜூலை 22ல் மறுபூஜை நடக்கும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

--

Advertisement