கிணற்றில் இறந்தவர் குறித்து விசாரணை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்தவர் தேவதாஸ் 59, மூன்று நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள கோட்டைச்சாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இறந்து கிடந்தார். கிணறு அருகே அவரது செருப்புகள் இருந்துள்ளது.

க.விலக்கு போலீசார், தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த அவரது மகன் பவுன்ராஜ் 37, தந்தை தேவதாஸ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக க.விலக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement