புகையிலை விற்றவர் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி 31, ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே வைகை அணை ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸில் பேன்சி மற்றும் கவரிங் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் கடையில் சோதனை செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 60 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்.

Advertisement