பெண்ணை தாக்கிய தாய், மகன் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஆர்.எஸ்.எஸ்., தெருவைச் சேர்ந்த சென்றாயன் மனைவி சுமதி 45. இவர் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார்.

அவரை பின்தொடர்ந்த சருத்துப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சூரியகிருஷ்ணா 25. சுமதியின் அலைபேசி எண் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சுமதி, சூரிய கிருஷ்ணா தாயார் சுதாவிடம் 45. புகார் தெரிவித்துள்ளார். சுமதியை, சுதா, சூரியகிருஷ்ணா அவதூறாக பேசியும்,சுதா கையால் சுமதியை அடித்துள்ளார். தென்கரை போலீசார் சுதா, சூரியகிருஷ்ணாவை கைது செய்தனர்.
--

Advertisement