ரேஷன் கடைகளில் அறிமுகமாகிய திட்டங்கள் சோதனையோடு முடக்கம்
தேனி, ஜூலை 6-ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்துதல், பொட்டலத்தில் பொருட்கள் வழங்கும் நடைமுறை சோதனையுடன் முடங்கியுள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் சீனி, பாமாயில், துவரம் பருப்பு, இலவச அரிசி,கோதுமை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் பொருட்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படுகிறது.
கடைகளில் சில்லரை தட்டுப்பாட்டால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க மே 2023ல் கியூ., ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓரிரு கடைகளில் அமல்படுத்தப்பட்டது. அதே போல் கடந்தாண்டு சேலம் மாவட்டம் சீரங்காபாளையம் ரேஷன் கடையில் சீனி, துவரம் பருப்பு, அரிசி பொட்டலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இந்த இரு திட்டங்கள் துவங்கப்பட்டு ஓராண்டுகளுக்கு மேலாக ஆன நிலையிலும் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடியவில்லை.
மேலும்
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்