விவேக் அகாடமி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விவேக் அகாடமி மாணவர்களுக்கு, 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி ராஜா நகரில் இயங்கி வரும் விவேக் அகாடமி டியூஷன் சென்டரில், 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அகாடமியின் முதல்வர் விவேக் தலைமை தாங்கி, 'தினமலர் - பட்டம்' மாணவர் பதிப்பு இதழ் வழங்கினார். செயலாளர் இலக்கியா முன்னிலை வகித்தார். அகாடமி பொறுப்பு ஆசிரியர்கள் கமல்ராஜ், ஸ்ரீதேவி, மகாலட்சுமி, சைனாஸ்பேகம் வாழ்த்துரை வழங்கினர்.

அகாடமி ஆசிரியர்கள் வசந்த், கமரியா, லலிதாகுமாரி, தனுஷ்யா, அம்சவள்ளி, அபிராமி, கவுசல்யா, வசிலா, ஜீனத், ஆயிஷா, யாஸ்மின், வினோசக்தி உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தினமலர் நடத்தும் பட்டம் இதழின், வினாடி வினா போடியில் பங்கேற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement