மனைவி, மகளை தவறாக பேசியதால் ஊராட்சி செயலர் வெட்டி கொலை நண்பர் அதிரடி கைது;

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே ஊராட்சி செயலரை வெட்டி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த சாங்கியம் ஊராட்சியைச் சேர்ந்த சொட்டையன் மகன் அய்யனார், 45; ஊராட்சி செயலாளர். நேற்று முன்தினம் அதிகாலை, அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அய்யனாரை கடந்த 3ம் தேதி இரவு, அதே ஊரைச் சேர்ந்த ராமர் மகன் அய்யப்பன், 54; அழைத்து சென்றதாக, அய்யனார் மனைவி சத்யா தெரிவித்த தகவலின் அடிப்படையில், திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அய்யப்னை அவரது கோழி பண்ணையில் கைது செய்தனர்.

விசாரணையில், அய்யப்பனின் மனைவி மற்றும் கடந்த மாதம் காதல் திருமணம் செய்து கொண்ட அவரது மகள் குறித்து அய்யனார் தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், அய்யனாரை அவரின் வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, தனது கோழிப்பண்ணையில் இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, அய்யனாரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் அய்யப்பன் குத்தி செய்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த மணலுார்பேட்டை போலீசார், ஐயப்பனை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement