தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 7.62 லட்சம் மோசடி திருவண்ணாமலை தம்பதி மீது வழக்கு

திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 7.62 லட்சம் மோசடி செய்த, திருவண்ணாமலை தம்பதிய மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 48; இவரது உறவினர்கள், திருவண்ணாமலை மாவட்டம், கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மற்றும் அவரது மனைவி விஜயகுமாரி. தம்பதி இருவரும் தீபாவளி சீட்டு, மளிகை சீட்டு நடத்தி வந்தனர். 12 மாதம் சீட்டு கட்டினால், 2 கிராம், 3 கிராம் தங்க நாணயம், 10 கிராம் வெள்ளி, சில்வர் பாத்திரம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய மூர்த்தி, தீபாவளி மற்றும் மளிகை சீட்டில் சேர்ந்ததுடன், தனது கிராமம் மற்றும் நண்பர்கள் 55 பேரை அதில் உறுப்பினராக சேர்த்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். மொத்தமாக ரூ. 7.62 லட்சம் செலுத்திய நிலையில், தம்பதி இருவரும் தீபாவளி மற்றும் மளிகை சீட்டுக்கான பொருட்களை தராமல் ஏமாற்றினர்.

இது குறித்து மூர்த்தி அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, தீபாவளி சீட்டு நடத்திய ஏமாற்றிய திருவண்ணாமலை தம்பதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement