3 பேரிடம் ரூ. 61 ஆயிரம் 'அபேஸ்'

புதுச்சேரி : புதுச்சேரியில் பெண்கள் உட்பட 3 பேரிடம் 61 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மக்கள் நகரை சேர்ந்த நபரை, அறிமுகம் இல்லாத நபர் தொடர்பு கொண்டு பேசினார். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பிய அவர் 30 ஆயிரத்து 943 ரூபாயை, அந்த நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.

கரையாம்புத்துரை சேர்ந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய நபர் பகுதி நேர வேலை இருப்பாக தெரிவித்தார். அதை நம்பி 12 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பி அவர் ஏமாந்தார். இருளன் சந்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம், தனியார் நிறுவன கடன் அதிகாரி என, ஒருவர் அறிமுகம் செய்து பேசினார். குறைந்த வட்டிக்கு 5 லட்சம் கடன் கொடுப்பதாக கூறினார். அதற்கு முன்பணமாக 17 ஆயிரத்த 300 ரூபாயை அந்த நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.

மூவரும் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement