விருத்தாசலத்தில் போட்டியிட மாட்டேன் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., 'பளீச்'

விருத்தாசலம்: வரும் சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட மாட்டேன் என அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., பேசினார்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
தமிகழத்தில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் அரங்கேறி வருகிறது. இதுபோல், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது கிடையாது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இந்த கூட்டத்தின் வாயிலாக ஒன்றை வெளிப்படையாக கூறுகிறேன். நான் விருப்ப மனு அளித்தால், புவனகிரி தொகுதிக்கு மட்டும் தான் அளிப்பேன். நான் ஏன் இந்த மேடையில் கூறுகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
விருத்தாசலம் தொகுதியில் நிற்கபோவதாக பரவலாக செய்தி பரவி வருகிறது. எக்காரணம் கொண்டும், புவனகிரி தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியிலும் நிற்க மாட்டேன். எனக்கு தலைமை சீட் வழங்கவில்லை என்றால், லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட தயாராவேன்.
சட்டசபை தேர்தலில் தலைமை நியமிக்கும் வேட்பாளர்களுக்கு, அ.தி.மு.க., தொண்டனாக தேர்தல் பணி செய்து, மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதி வேட்பாளர்ளகளையும் வெற்றி பெற செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை