மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவக்கம்

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவங்கியது.
உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் மஹாசக்தி மாதிரியம்மன் கோவில் உள்ளது.
இந்தாண்டிற்கான மகோத்சவ விழா, நேற்று, காலை 6:30 மணிக்கு, மஹா கணபதி பூஜையுடன் துவங்கியது.
பின், காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, இன்று, காலை 7:00 மணிக்கு, பக்தர்கள் விரதமிருந்து சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடக்க உள்ளது.
இதையடுத்து, நாளை, பிற்பகல் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்வும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கலும் வைக்கப்பட உள்ளது. இறுதியாக, இரவு 10:00 அம்மன் வீதியுலா நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
Advertisement
Advertisement