தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை

புதுச்சேரி, ஜூலை 7- புதுச்சேரியில் காசநோய் பாதிப்பு இல்லாத கிராமங்களாக கண்டறியும் பணியை சுகாதார துறை முடுக்கிவிட்டுள்ளது.
உலகில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் காசநோய்க்கு முக்கிய இடம் உண்டு. இதற்கு எதிராக பி.சி.ஜி., தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டாலும் பல லட்சம் பேர், காச நோயால் ஆண்டுதோறும் சத்தம் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நோய்க்கு எதிராக புதிய தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த தடுப்பூசி உலக அளவில் பல லட்சம் மக்களின் உயிரை காப்பாற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தீவிர காசநோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே காசநோய் பாதிப்பும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு 1 லட்சம் பேருக்கு 115 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
தற்போது இது 1 லட்சம் பேருக்கு 100 பேராக குறைந்துள்ளது. சுகாதார துறையின் காசநோய் தடுப்பு திட்ட தொடர் நடவடிக்கையே இதற்கு முக்கிய காரணம்.
இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் 40 கிராமங்கள் காசநோய் பாதிப்பு இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தயாரிப்பு பணிகளை சுகாதார துறை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.
அண்மையில் நடந்த 100 காசநோய் கண்டறியும் முகாமில் புதுச்சேரியில் 3.9 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் வீடுவீடாக சென்று நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில் காசநோய் இருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்ட 24 ஆயிரம் பேருக்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. மேலும் 15 ஆயிரம் பேருக்கு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் கையில் கிடைத்துள்ள சூழ்நிலையில், ஒவ்வொரு கிராமங்களாக பாதிப்பு விவரங்களை அலசி வருகிறது. கடந்தாண்டு சிவராந்தகம், அரியூர், வாதானுார், சோரியாங்குப்பம், கருவடிக்குப்பம், பூரணாங்குப்பம், செம்பிப்பாளைம், கோர்க்காடு உள்ளிட்ட எட்டு கிராமங்கள் காசநோய் பாதிப்பு இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டது.
இந்தாண்டு 40 கிராமங்களை காசநோய் பாதிப்பு இல்லாத கிராமங்களாக அறிவிக்க முடிவு செய்து பணிகளை வேகப்படுத்தி வருகிறது.
காசநோய் பாதித்தவர் குறைந்தது தன்னுடைய வட்டத்தில் இருக்கும் 10 பேருக்காவது அதைப் பரப்பிவிடும் அபாயம் கொண்டவர்.
எனவே இருமல், சளி போன்ற அறிகுறிகள் தொடர்ச்சியாக இருக்கும்பட்சத்தில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால் காசநோய் கண்டறியப்பட்டவரின் நெருக்கமான வட்டத்தில் இருக்கும் பணியாளர்களும், குடும்பத்தினரும் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உண்டு என, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
@block_B@
காசநோய் பாதித்தவர் இருமும்போது, டியூபர்குளோசிஸ் பாக்டீரியா காற்றில் பரவுகிறது. ஆரோக்கியமான நபரின் நுரையீரலுக்குள் இந்த பாக்டீரியா காற்றின் மூலம் செல்லும்போது அவருக்கும் காசநோய் தொற்று உண்டாகிறது. காய்ச்சல், எடை குறைதல், அதிக பசி, உடல் சோர்வு ஆகியவை காசநோய் ஏற்பட்டதற்கான பொது அறிகுறிகளாக உள்ளன. இவற்றைத் தாண்டி காசநோய் பாதித்துள்ள உறுப்பினைப் பொறுத்தும் இந்த அறிகுறிகள் மாறும்.காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் உள்ளது. எனவே, 2 வாரங்களுக்கு மேல் சளி, இருமல் தொடர்ந்தால் அது காசநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை தேவை. சில நேரங்களில் சளியில் ரத்தம் கலந்து வருவதும் காசநோயாக இருக்கக் கூடும். நுரையீரல் தவிர்த்து கழுத்துப்பகுதியிலுள்ள சுரப்பிகள், வயிறு, மூளை போன்ற பகுதிகளிலும் காசநோய் தொற்று உண்டாகலாம். மூளையில் காசநோய் ஏற்படும் பட்சத்தில் தலைவலி, பார்வை மங்குதல், நினைவிழப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.block_B
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு