குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், பொட்டிரெட்டிபட்டி, கஸ்துாரிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி சாகு-படியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். கூலியாட்கள் மூலம் பறிக்கும் பூக்களை, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு ஏலத்திற்கு அனுப்புகின்-றனர்.


சில வாரங்களாக இப்பகுதியில் அதிக வெயில் காரணமாக குண்-டுமல்லி பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், முகூர்த்த தினங்கள் இல்லாததால் விலை குறைந்துள்ளது. முகூர்த்த மாதங்-களில் கிலோ, 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் குண்டு மல்லிகை பூக்கள், தற்போது ஆனி மாதம் என்பதால், பூக்கள் விலை மிகவும் சரிந்து கிலோ, 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்-ளனர்.

Advertisement