தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் ..

திண்டிவனம்: திண்டிவனம், 20வது வார்டு, காவேரிப்பாக்கத்தில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் சேகர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை வீடு, வீடாக நடந்தது.

மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், விவசாய அணி குமார், வார்டு நிர்வாகிகள் ஒஸ்தி, கணபதி, சுரேஷ், செல்வம், கதிரவன், சந்தோஷ்குமார், கமலக்கண்ணன், சூரியபிரகாஷ், ரஷீத்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement