சிப்காட் - மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம் வழியாக, மாதர்பாக்கம் வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு போதிய பேருந்து வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் தினசரி பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
இதனால், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம், ஈகுவார்பாளையம் வழியாக மாதர்பாக்கம் வரை, காலை மற்றும் மாலை நேரங்களில், அரசு பேருந்து இயக்கினால், தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, சிப்காட் - மாதர்பாக்கம் இடையே பேருந்துகள் இயக்க அரசு முன்வர வேண்டும் என, தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை