சத்திரம் விமான தளம் பணிகள் செய்ய வனத்துறை இடையூறு; அரசு தலையிட ஆலோசனை

மூணாறு : விமான தளம் அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள இடையூறை அரசு தலையிட்டு நிவர்த்தி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரத்தில் தேசிய மாணவர் படையினர் பயிற்சி பெறும் வகையில் விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. 800 மீட்டர் தூரம் ஓடுதளம், நான்கு சிறிய ரக விமானங்கள் நிறுத்தவதற்கு இடவசதி, 50 மாணவர்கள் தங்குவதற்கு விடுதி உள்பட பல்வேறு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. ஓடு தளத்தில் உள்ள மண் திட்டுகளால் விமானம் தரையிறங்கும் சோதனை ஓட்டம் இருமுறை தோல்வியுற்றது. இறுதியில் 2022 டிசம்பர் ஒன்றில் தேசிய மாணவர் படையின் இரண்டு இருக்கைகளைக் கொண்ட வைரஸ் எஸ்.டபிள்யூ. 80 ரக விமானம் வெற்றிகரமாக தரை இறக்கியது.
தடங்கல்: விமான தளம் அமைக்க வழங்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என வனத்துறையினர் சொந்தம் கொண்டாடியதால், மண்திட்டுகளை அகற்றவும், 2022 ஜூலையில் பெய்த மழையில் ஓடு தளத்தின் ஒரு பகுதியில் சேதமடைந்த பாதுகாப்பு சுவரை சீரமைக்க தடங்கல் ஏற்பட்டது.
ஆலோசனை: அப்பிரச்னையில் அரசு தலையிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கு 1961ம் ஆண்டு கேரள வனச் சட்டத்தில் அரசின் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு சட்ட விதிகள் ஆராயப்பட்டு, அட்வகட் ஜெனரல், சட்ட துறை ஆகியோரிடம் ஆலோசனை பெறப்பட்டது.
இடுக்கி கலெக்டருடன் ஆலோசித்து பிரச்னைக்கு தீர்வு காணுமாறு முதல்வர் பினராயிவிஜயன் கூறியதாவும், அதனால் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கோட்டயம் வனத்துறை அதிகாரி பிரபுல்அகர்வால் தெரிவித்தார்.
மேலும்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை