பள்ளிப்பாளையம் - புதுகுப்பம் சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:பள்ளிப்பாளையம் - புதுகுப்பம் இடையேயான சாலையில் செடிகள் வளர்ந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருப்பதால், கிராமவாசிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.
பொன்னேரி அடுத்த தேவம்பட்டு பகுதியில் இருந்து, பள்ளிப்பாளையம் வழியாக புதுகுப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்து, அவற்றின் கிளைகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
அதேபோல், சாலையின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் முள்செடிகளிலும், ஜல்லிக் கற்களிலும் சிக்கி தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
இச்சாலையை புதுகுப்பம், சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு, கள்ளூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர். சாலை மோசமாக இருப்பதால், பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, பள்ளிப்பாளையம் - புதுகுப்பம் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை