சைகை மொழி பயன்பாடு அரசு துறைகளில் அமலுக்கு வருமா?
சென்னை: 'காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக் கான சைகை மொழி பயன்பாட்டை, அரசின் அனைத்து நிறுவனங்களி லும் செயல்படுத்த வேண்டும்' என, மாற்றுத்திறனாளி கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி, மற்ற மனிதர்களை போல் அவர்களும் பிறர் துணையின்றி இயல்பாக வாழ, தடையற்ற சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்.
அதன்படி, அரசு கட்டடங்கள், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட சேவைகள், மாற்றுத்திறனாளி கள் எளிதில் அணுகும் வகை யில் மாற்றப்பட்டுள்ளன.
இருப்பினும், காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக்கான, சைகை மொழியை நடைமுறைப்படுத்துவதில், தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், அவர்களால் அரசு வழங்கும் நலத் திட்டங்களை எளிதில் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது:
மொத்தமுள்ள, 21 வகை மாற்றுத்திறனாளிகளில், காது கேளாதோர், வாய்பேச முடியாதவர்கள் தான் அதிகம். ஆனால், அவர்கள் பயன்படுத்தும், ஐ.எஸ்.எல்., எனும் இந்தியன் சைகை மொழி பயன்பாடு, நம் நாட்டில் மிக குறைவு. உலக அளவில், 466 மில்லியன் காது கேளாதோர் உள்ளனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள், அந்த நாட்டு சைகை மொழியை, அவர்களது அரசு நிறுவனங்களில் செயல்படுத்தி உள்ளது. அதேபோல், டில்லி, மும்பை நகரங்களில், சைகை மொழி தெரிந்தவர்கள், நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி, மத்திய, மாநில அரசுகள் அரசாணைகள், அரசு நலத்திட்டங்களுக்கான விதிமுறைகளும், சைகை மொழியில் சொல்லப்பட வேண்டும். டில்லி உள்ளிட்ட மாநிலங்கள், தற்போது இதை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன.
அதேபோல், தமிழக அரசும் முன்வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக, காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்த கோரி போராடி வருகிறோம். ஆனால், இதுவரை தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூட, இதை செயல்படுத்த முன்வரவில்லை.
எனவே, சைகை மொழி பயன்பாட்டை, அரசின் அனைத்து துறைகளிலும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
'ஸ்பைஸ் ஜெட்' விமானம் கோளாறு ; சென்னை பயணியர் கடும் கொதிப்பு
-
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
-
தலைமை செயலகம் முன் வரையாடு சிலை
-
ரூ.50,000க்கு குழந்தை விற்பனை தாய் உட்பட மூவரிடம் விசாரணை
-
போக்குவரத்து அமைச்சருக்கு 'ஷாக்' கொடுத்த பஸ் ஊழியர்கள்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'