போக்குவரத்து அமைச்சருக்கு 'ஷாக்' கொடுத்த பஸ் ஊழியர்கள்

9

கரூர் : அனுமதி இல்லாத ஹோட்டலில் பஸ்சை நிறுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம்,அவர் யாரென்றே தெரியாமல்பஸ் ஊழியர்கள்திருதிருவென விழித்துஅதிர்ச்சி அளித்தனர்.


கோவை, கொடீசியா வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 100 புதிய பஸ்களின் சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் அரியலுாருக்கு சென்றார்.



கரூர் - -மாயனுார் இடையே ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி டீ குடித்தார். அதே உணவகத்தில் ஒரு அரசு பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர்,அவர்களிடம்பேச்சு கொடுத்தார்.


'உங்களுக்குஉணவு, காபி, டீ சாப்பிடடெண்டர் விட்டு ஹோட்டல்களைஅரசு ஒதுக்கி உள்ளதே. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்? இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது?' என, கேட்டுள்ளார்.


அமைச்சர் பேண்ட், சர்ட் அணிந்து பயணியை போல் இருந்ததால்,பஸ் ஊழியர்களுக்குஅடையாளம் தெரியவில்லை.திருதிருவென விழித்து நின்ற அவர்களிடம், 'நான் யார்னு தெரியுதா...' என, அமைச்சர் கேட்க,'தெரியலையே' எனபஸ் ஊழியர்கள் சொல்ல, 'நான் தான்பா மினிஸ்டர்' என்றார் சிவசங்கர்.


பின்,'இனி இதுபோல் செய்யாமல், உங்களுக்கான இடத்தில் மட்டும் பஸ்சை நிறுத்தி உணவருந்துங்கள்' என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Advertisement