மின்துறை விளையாட்டு போட்டி சென்னை அணி சாம்பியன்

சென்னை:கோவையில் நடந்த மின் துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, சென்னை அணி வென்றது.

மின்துறையின் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு, தடகள போட்டிகள் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா, கோவையில் நேற்று நடந்தது.

போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, சென்னை மண்டல அணி வென்றது. தமிழக போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சிவசங்கர், பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார்.

வெற்றி பெற்ற பல்வேறு மண்டல அணிகளுக்கும், வீரர்களுக்கும் கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழக மின் தொடரமைப்பு கழக நிர்வாக இயக்குநர் இந்திராணி, மின்துறை இயக்குநர் மாஸ்கர்னஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement