மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்

தொண்டாமுத்தூர்; மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம், கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்தார்.

அங்கு, சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம், ஆதியோகி ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் சத்குரு குருகுலம் ஈஷா சமஸ்கிருதி பள்ளிகளை பார்வையிட்டார்.

ஈஷாவை சுற்றியுள்ள தானிக்கண்டி மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்கள் இணைந்து, ஈஷாவின் வழிகாட்டுதலில், தலா, 200 ரூபாய் முதலீட்டில் 'செல்லமாரியம்மன் சுய உதவிக்குழுவை' உருவாக்கியுள்ளனர்.

அக்குழு, தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு அமைச்சர் பாராட்டினார். அதன்பின், ஈஷாவிற்கு அருகில் உள்ள பழங்குடி கிராமத்திற்கு சென்று, கிராம மக்களுடன் உரையாடினார்.

இதன்பின், அமைச்சர் ஜூவல் ஓரம் பேசுகையில், ''கிராமப்புற மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட ஈஷாவின் பணிகள் பாராட்டத்தக்கவை. ஈஷாவின் உதவியால், பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்து, வரி செலுத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற முன்னெடுப்புகள், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழிவகுக்கும். இது, பிரதமர் மோடி மற்றும் சத்குருவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும்,'' என்றார்.

Advertisement