மென்மையை கையாளும் போலீஸ்; அஜித்குமார் மரணம் எதிரொலி
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், இரு எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட 50 பேர் பணிபுரிகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் நடக்கும் அடிதடி பிரச்னை, கொலை, தற்கொலை, சாலை விபத்து உள்ளிட்டவற்றிற்கு திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனிற்கு தான் வரவேண்டும்.
தினமும் 20க்கும் மேற்பட்டோர் புகார் தர இந்த ஸ்டேஷனுக்கு வருவர். அஜித்குமார் மரணத்திற்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தர வருபவர்களை அலைக்கழிப்பது. மரியாதை இன்றி பேசுவது போன்ற செயல்களில் ஒருசில போலீசார் ஈடுபட்டனர். திருப்புவனத்தில் ஜூன் 27ல் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அஜித்குமார் போலீசார் தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் குறித்து அதிருப்தி நிலவுகிறது.
இதனால் ஸ்டேஷனுக்கு வருபவர்களிடம் போலீசார் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர். இருநாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் போதையில் ஸ்டேஷனுக்கு உள்ளேயே சென்று ரகளை செய்ய போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த மென்மையான போக்கு எத்தனை நாட்களுக்கு நிலவுமோ என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு