வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

கொடுங்கையூர்:கொடுங்கையூரில், வீட்டின் பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மாயமாகின.

கொடுங்கையூர், திருவள்ளூர் நகர் 7வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேகர், 47. இவரது மனைவி ஜெயந்தி, 45. தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தம்பதி மீஞ்சூரில் 'காபி ஷாப்' நடத்தி வருகின்றனர். கடைக்கு செல்லும்போது, வீட்டை பூட்டி ஜன்னல் அருகே சாவியை வைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜெயந்தி திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, நேற்று பீரோவில் இருந்த, இவரது 2 சவரன் தங்க வளையல், 10 சவரன் செயின் உள்ளிட்ட 12 சவரன் நகைகளை பார்த்தபோது, அவை திருட்டுபோனது தெரிய வந்தது.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement