இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

தோஹா: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.



இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்தம் செய்வது தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
போர் நிறுத்தம் மற்றும் பிணைய கைதிகளை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால் பேச்சு தோல்வியில் முடிந்தது.


இருதரப்பினரிடையே அடுத்த வாரம் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்ற தெரிகிறது.

Advertisement