பூக்கள் விலை உயர்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், அவற்றை தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் பூ சந்-தையில் விற்பனை செய்கின்றனர்.
இங்கு, விற்பனை செய்யப்படும் பூக்களை, தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்-ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி
செல்கின்றனர்.
இன்று, ஆனி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால், பூக்கள் தேவை அதிகரித்ததால், விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம், ஒரு கிலோ குண்டுமல்லி, 300, சன்ன மல்லி, 280, ஜாதி மல்லி, 300, பன்னீர் ரோஸ், 70, சம்பங்கி, 70, சாமந்தி, 150 ரூபாய் என விற்பனையானது.
நேற்று விலை உயர்ந்து, குண்டுமல்லி, 320, சன்ன மல்லி, 320, ஜாதிமல்லி, 340, சம்பங்கி, 80, பன்னீர்ரோஸ், 80, சாமந்தி, 160, ரூபாய் என, 10 டன் பூக்கள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு