ஓசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நடவடிக்கை அமைச்சருக்கு காங்., மாஜி எம்.எல்.ஏ., கேள்வி
ஓசூர்: ''கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்,'' என, ஓசூர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளருமான மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஓசூர் நகரில் ஏற்படும் போக்குவரத்தை
நெரிசலுக்கு தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க-வில்லை. இதனால் வயது முதிர்ந்தவர்கள் என்ன பாடு படுகி-றார்கள் என்பதை, தி.மு.க., அரசு கவனத்தில் எடுத்து கொள்ள-வில்லை. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பால வில-கலை, சரிசெய்ய விஞ்ஞானிகள் இதுவரை வரவில்லைஆயுதப்-படை போலீசாரை ஓசூருக்கு வரவழைத்து, போக்குவரத்தை சீர-மைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி வாரந்-தோறும் வருகிறார். ஆனால் அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என தெரியவில்லை. பாதாள சாக்கடை பணி துவக்கி, பின் மூடப்பட்டு விட்டது. பாகலுார் சாலை பணி இன்னும் முடிய-வில்லை. தளி ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட-வில்லை. சாலைகள் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை, தலைமை செயலர் நடத்த வேண்டும். ஆசிய அளவில், ஓசூர் வேகமாக வளர்ந்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு