100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

சேலம்: சேலத்தில், ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்த-திய சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று திருவாக்கவுண்டனுாரில் நடந்தது.

அறக்கட்டளை நிறுவனர் அதியமான் தலைமை வகித்தார். அதில், சுற்றுலாத்-துறை அமைச்சர் ராஜேந்திரன், 100க்கும் மேற்பட்ட மாணவர்க-ளுக்கு, உயர்கல்விக்கான உதவித்தொகைகளை வழங்கினார். அறக்கட்டளை பொதுச்செயலர் ரவிக்குமார், நிதி செயலர் பெரு-மாவளவன், மாவட்ட செயலர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, அதியமான் அளித்த பேட்டியில், ''வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைத்து, ஸ்டாலின் முதல்-வராக, அருந்ததிய சமூக மக்கள் பாடு படுவர்,'' என்றார்.

Advertisement