ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்

சிவகங்கை ; தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் மாவட்ட கூட்டம் சிவகங்கையில் நடந்தது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய தைனேஸ் தீர்மானங்களை வாசித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அரசாணை 243யை ரத்து செய்ய வேண்டும். ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தர ஊதியம் ரூ.5400 மற்றும் ரூ.5700க்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையை நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Advertisement