இலவச மரக்கன்று பெற வனத்துறை அழைப்பு
ஈரோடு: தமிழக வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு, நேரடி
யாக பலன் தரும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகள் நிலத்தை காண்பித்தால், வனத்துறையினரே நேரடியாக வந்து மரக்கன்றுகளை நட்டு வைத்து கொடுக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- விவசாயிகள் விரும்பினால் அவர்களது நிலத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்-றுகள் நட்டு கொடுக்கப்படும். ஆனால் மரங்களை முறையாக பரா-மரிப்பு செய்ய வேண்டும்.
தேக்கு, மகாகனி, செம்மரம், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள் நடவு செய்யப்படும். தொழிற்சாலை, கல்வி நிறுவ-னங்கள், கோவில் நிலங்கள், பொது இடங்களில் நாவல், நாட்டு வேம்பு, புளிய மரம், புங்கன் மரம், நீர்மருது, வாகை, மகிழம், தான்றி, கொடுக்காபுளி, ஆலமரம், பாதாம், வேங்கை மரம் நடப்-படுகிறது. குறைந்தபட்சம், 300 மரக்கன்று நடுவதற்கான இடவ-சதி இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் ஈரோடு வன விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா