சர்வதேச சிலம்ப போட்டியில் வேளாளர் பள்ளி அசத்தல்

ஈரோடு: சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்தது. இதில் ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 10 வயது பெண்கள் பிரிவில் வனிதா, மான்கொம்பு மற்றும் குத்து வரி-சையில் முதலிடம் பெற்றார்.
ஆண்கள் பிரிவில் சேந்தன் கார்த்திகேயன் வேல்கம்பில் முத-லிடம், சித்திரை சிலம்பத்தில் இரண்டாமிடம் பிடித்தார். 14 வயது பெண்கள் பிரிவில், தான்யாமித்ரா இரட்டைவாலில் முத-லிடம், தொடுமுறையில் மூன்றாமிடம் பிடித்தார். இவர்களுக்கு பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், வேளாளர் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரியதர்ஷினி, துணை-முதல்வர் மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர்
கார்த்திகேயன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement