தொழில்துறையை நசுக்கும் மின் கட்டணம் முதல்வருக்கு பேட்டியா அமைப்பு கடிதம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்-டமைப்பு (பேட்டியா) தலைவர் ராஜமாணிக்கம், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட, 60 சதவீத மின் கட்டண உயர்வை குறைக்க, மின்சார துறைக்கு கோரிக்கை வைத்-துள்ளோம். ஆனால் குறைக்கப்படாமலே உள்ளது. தற்சமயம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் இருந்து மேலும், 3.6 சதவீதம் கட்டணம் உயர்த்துவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிலை கட்டணமும் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில், வணிக நிறுவனங்களுக்கு இதேபோல் அதிக மின் கட்-டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே நிலை கட்டண உயர்-வையும், மின் கட்டண உயர்வையும், அரசு ரத்து செய்ய வேண்டும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் மின் கட்டணத்தை, 25 சதவீதம் வரை குறைப்-பாக அறிவித்துள்ளனர். இச்சூழலில் தமிழக அரசு மின் கட்ட-ணத்தை மேலும் உயர்த்துவது தொழில் துறையை பெருமளவு பாதிக்கும். உயர்த்தப்பட்ட மின் மற்றும் நிலை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு