'சமூக மாற்றத்தை, அரசியல் பண்பை மாற்றக்கூடிய சூழலை உருவாக்கணும்'
மோகனுார்: ''நாம் எல்லோரும் துார நின்று பார்வையாளர்களாக இல்லாமல், கொஞ்சம், கொஞ்சமாக, சமூக மாற்றத்தை, அரசியல் பண்பை மாற்றக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும்,'' என, விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ்., பேசினார்.
நாமக்கல் மாவட்ட முன்னாள் கலெக்டரும், விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ்., எழுதிய 'கடைசி தறியில் கண்டாங்கி சேலை' என்ற நுால் வெளியீட்டு விழா, மோகனுார் லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் நேற்று நடந்தது.
சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர் முத்துசாமி தலைமை வகித்தார். நம்பிக்கை இல்ல இயக்குனர் கதிர்செல்வன் வர-வேற்றார். திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தலைவர் சிதம்பரம், நாமக்கல் மாவட்ட மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் தில்லை-சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மோகனுார் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் பழனியாண்டி நுாலை வெளியிட, நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் குழந்தைவேல் பெற்றுக்கொண்டார். நாமக்கல் தமிழ்ச்சங்க செய-லாளர் நாராயணமூர்த்தி, நுாலாய்வு செய்து பேசினார். நுாலாசிரி-யரும், விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ்., ஏற்புரையாற்-றினார். அப்போது, அவர் பேசியதாவது:
நான் மதுரை மாவட்டத்தில் கடுமையான பணிகளை மேற்கொண்-டதற்கு, அடித்தளமாக அமைந்தது நாமக்கல். அதனால், என், மனைவி, குழந்தைகளிடம் கூறுவேன், நாமக்கல் நம் மக்கள் இருக்கின்ற இடம் என்று. இந்த புத்தகத்தில் நான் மிகவும் நேசித்த நெசவு தொழிலை, அவர்களின் வறுமையை, வலியை எழுதியிருக்கிறேன். அவற்றை நீங்கள் படித்து தெரிந்து கொள்-ளுங்கள்.
நாம் எல்லோரும் துார இருந்து பார்வையாளர்களாக இல்லாமல், கொஞ்சம், கொஞ்சமாக, சமூக மாற்றத்தை, அரசியல் பண்பை மாற்றக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்