'லிங்க்' அனுப்பி பண மோசடி சென்னை ஆசாமி சிக்கினார்

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் தனபாக்கியம், 40. கிரெடிட் கார்டு பயன்-படுத்தி வந்தார். கடந்த, 2023ல் ஒருவர், தனபாக்கியத்தை போனில் அழைத்து கிரெடிட் கார்டில் பெற்ற தொகைக்காக, 88 ஆயிரத்து, 625 ரூபாயை செலுத்துமாறு கூறினார்.


இதை நம்பிய தனபாக்கியம், அவர் கொடுத்த லிங்க் மூலம், பணத்தை செலுத்தினார். சிறிது நேரத்தில் தனபாக்கியத்தின் கார்டி-லிருந்து, 88 ஆயிரத்து, 625 ரூபாய் எடுக்கப்பட்டது. அது வங்கிக்-கணக்குக்கு செல்லவில்லை என்பது தெரிந்தது.தனபாக்கியம் அளித்த புகாரை, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இருவர் கைவரிசை காட்டியது தெரிந்தது. ஏற்கனவே, மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்-போது சென்னையை சேர்ந்த தீபக், 30 என்பவரை கைது செய்து, மொபைல் போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.

Advertisement