மாநில கால்பந்து: மாவட்ட அணி தேர்வு

திருப்பூர:மாநில கால்பந்து கழகம் சார்பில், மாணவர் சப் - ஜூனியர் மாநில கால்பந்து போட்டி 16 முதல் 20ம் தேதி வரை புதுக்கோட்-டையில் நடக்கிறது. மாணவியர் மாநில சப்-ஜூனியர் கால்பந்து போட்டி, 19 முதல் 22ம் தேதி வரை திருநெல்வேலியில் நடக்கி-றது.


இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட சப் ஜூனியர் கால்பந்து அணி வீரர், வீராங்கனை தேர்வு, கணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட கால்பந்து அசோசியேஷன் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கால்பந்து வீரர் தேர்வு போட்டியை மைக்ரோ கிட்ஸ் பள்ளி தாளாளர் சங்கர் துவக்கி வைத்தார். மாவட்டம் முழுதும் இருந்து, மாணவர் பிரிவில், 168 பேர், மாணவியர் பிரிவில், 93 பேர் என, 261 பேர் போட்டித் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்-றனர். இவர்களில் இருந்து, 34 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டது.

Advertisement