கோவிலில் திருடிய 2 பேர் கைது

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே தொட்டிப்பட்டி கிராமத்தில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று விடியற்காலை, 4:00 மணிக்கு மர்ம நபர்கள் இரண்டு பேர் பூட்டை உடைத்து பூஜை சாமான்களை திருடி செல்ல முயற்சித்தனர். பொதுமக்கள், மர்ம நபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


விசாரணையில், சின்ன மணலியை சேர்ந்த கவுதம், 27, மாதேஸ்வரன், 34, என்பது தெரியவந்தது. வேலகவுண்டம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement