இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்

கோவை: கோவையில் இ.பி.எஸ். பங்கேற்ற கூட்டத்துக்கு வந்திருந்த 3 பேரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்ற நிகழ்ச்சிக்கு இன்று தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கராஜ் வந்திருந்தார்.
கூட்ட நெரிசலில் சிக்கிய அவரின் பேண்ட் பாக்கெட் பிளேடால் வெட்டிய மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த ரூ.1.லட்சத்தை பிக்பாக்கெட் அடித்தனர்.
நெல்லித்துறை அ.தி.மு.க., பிரமுகர் ஆனந்த் என்பவரிடமும் மர்ம நபர்கள் ரூ.1 லட்சமும், அபு என்பவரிடம் ரூ.2500-ஐயும் பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில்,போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: மாந்த்ரீகம் செய்ததாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை
-
அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
-
சட்டசபை தேர்தல் பிரசாரம்: மேட்டுப்பாளையத்தில் துவக்கினார் இ.பி.எஸ்.,
-
ஆணைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல்: முதல்வர் ஸ்டாலின்
-
கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்
-
வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசை வெளியீடு
Advertisement
Advertisement