வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசை வெளியீடு

கோவை:கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலையில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1,240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 2,430 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 552 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1,878 பேர் தரவரிசைக்கு தகுதி பெற்றனர்.


மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் 30 இடங்களுக்கு 14 பேர் விண்ணப்பித்துள்ளனர்
தரவரிசைப் பட்டியலில் உள்ள 1878 இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 380 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 706, ஆதி திராவிடர் 635, அருந்ததியர் 68, பொது 3, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 21, பழங்குடியினர் 65 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
உயிரியல் பாடப்பிரிவில் 195 கட் ஆப் மதிப்பெண்ணுடன் பிரவின் முதலிடம் பிடித்துள்ளார். கதிர் (194.50), ஜெயவர்மன் (193) ஆகியோர் முறையே, 2,3ம் இடங்களைப் பிடித்துள்ளனர்.
கணிதப்பாடப்பிரிவில் ஜெயவர்மன் (196), கார்த்திகேயன் (193), இர்பானா ஷாஜிதா (189) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

Advertisement