உலக விளையாட்டு செய்திகள்

நார்வே முன்னேற்றம்
சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில், பின்லாந்தை வென்றது. ஏற்கனவே சுவிட்சர்லாந்தை வீழ்த்திய நார்வே அணி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.

போர்ச்சுகல் ஏமாற்றம்
ஸ்பெயினில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கூடைப்பந்து (18 வயது) லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 42-48 என ஹங்கேரியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி 69-61 என லாட்வியாவை வென்றது.

செர்பியா அசத்தல்
குரோஷியா, செர்பியாவில் நடக்கும் பெண்கள் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் (19 வயது) லீக் போட்டியில் செர்பிய அணி 3-1 என அர்ஜென்டினாவை வீழ்த்தியது. மூன்றாவது வெற்றியை பதிவு செய்த செர்பியா, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தது.

அமெரிக்கா 'சாம்பியன்'
சுவிட்சர்லாந்தில் நடந்த உலக கோப்பை கூடைப்பந்து (19 வயது) பைனலில் அமெரிக்கா, ஜெர்மனி அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 109-76 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 9வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


எக்ஸ்டிராஸ்

* துாரந்த் கோப்பை கால்பந்து 134வது சீசன், வரும் ஜூலை 23ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. முதல் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், சவுத் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. பைனல், ஆக. 23ல் நடக்கவுள்ளது.

* இந்திய 'டாப்-ஆர்டர்' பேட்டர் பிரித்வி ஷா 25, மும்பை அணியில் இருந்து விலகி மகாராஷ்டிரா அணியில் இணைந்தார். இவர், 2025-26 சீசனுக்கான உள்ளூர் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடுவார்.


* கஜகஸ்தானில் நடக்கவுள்ள ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசனுக்கான (ஆக. 16-30) இந்திய அணியில் மனு பாகர் (10, 25 மீ., 'ஏர் பிஸ்டல்'), சரவுரப் சவுத்ரி (10 மீ., 'ஏர் பிஸ்டல்'), ஈஷா சிங் (25 மீ., 'பிஸ்டல்') உள்ளிட்ட 35 பேர் தேர்வாகினர்.


* நெதர்லாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' ஹாக்கி அணி, 8 போட்டிகளில் பங்கேற்கிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

Advertisement