நாளை வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
சென்னை: ''விலைவாசி உயர்வு உட்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 13 தொழிற்சங்கங்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன,'' என, தொ.மு.ச., பேரவை தலைவர் நடராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னையில் அவர் அளித்த பேட்டி:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்; மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கள் சார்பில், நாளை அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
இந்த வேலை நிறுத்த நாளில், தமிழக மாவட்டங்களில், சாத்தியமுள்ள இடங்களில், மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலை நிறுத்தத்தில், அனைத்து துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு சுயேச்சை தொழிற்சங்கங்கள், துறை வாரியான தொழிற்சங்கங்கள் பங்கேற்க வேண்டும் என, தமிழகத்தில் இயங்கும், 13 தொழிற்சங்கங்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அத்துடன், அனைத்து தரப்பு தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், மகளிர் அமைப்புகள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு
-
விராட் கோலி-அனுஷ்கா புகைப்படங்கள் வைரல்: விம்பிள்டனில் ஜோகோவிச் ஆட்டத்தை ரசித்தனர்
-
தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்; கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி!
-
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து