காலிஸ்தான் பயங்கரவாதியை நாடு கடத்துகிறது அமெரிக்கா

புதுடில்லி: பஞ்சாபில் நடத்தப்பட்ட, 14 குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதி ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங், இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்.

பாக்., - ஐ.எஸ்.ஐ.,யின் உயர் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து வந்த பாசியா, 'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' உள்ளிட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்றவர். சண்டிகரில் கடந்தாண்டு செப்., மாதம் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில், பாசியா மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை என்.ஐ.ஏ., பிறப்பித்தது.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளித்தால், 5 லட்சம் ரூபாய் சன்மானமும் என்.ஐ.ஏ., அறிவித்திருந்தது. இந்த நிலையில், பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.

தற்போது அமெரிக்க சிறையில் உள்ள பாசியா விரைவில் டில்லி அழைத்து வரப்பட உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Advertisement