கல்வி தகுதிக்கேற்ப ஊதியம்: அரசுக்கு வலியுறுத்தல்
சேலம், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணி பேசியதாவது: நுகர்பொருள் வாணிப கிடங்கில் உள்ள தராசையும், ரேஷன்கடை விற்பனை முனையத்தையும் இணைத்து, அதன் அடிப்படையில் சரியான எடையளவில்
அத்தியாவசிய பொருட்களை, ரேஷன் கடைகளுக்கு வழங்கிட தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. அகில இந்திய ஆய்வறிக்கைப்படி, ரேஷன் கடைகளுக்கு சேதார கழிவுகள் தர வேண்டும்.
விரல்ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பை மீண்டும், 40 சதவீத அளவில் நடைமுறைப்படுத்துவதுடன், இணையதள சேவையை மேம்படுத்தினால் மட்டுமே, நுகர்வோரின் அதிருப்திக்கு ஆளாவதை தடுக்க முடியும். ரேஷன் விற்பனையாளர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்குவதோடு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் ஊதிய மாற்றம் குழு அமைத்து, 9வது மாநில ஊதிய மாற்ற குழுவில் சேர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு பேசினார். நிர்வாகிகள் கணேசன், நாகேந்திரன், சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
காசநோய் இறப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் தமிழகம் முன்மாதிரி
-
கொசு ஒழிப்பிலும் வந்துவிட்டது ஏ.ஐ.,
-
காலிஸ்தான் பயங்கரவாதியை நாடு கடத்துகிறது அமெரிக்கா
-
நாளை வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
-
கிடங்கு கட்டுவதற்கு ரூ.25 லட்சம் கடன் வழங்குகிறது கூட்டுறவு வங்கி
-
கூட்டாளி வீட்டில் கோகைன் பதுக்கினோம் போலீசிடம் சிக்கியவர் வாக்குமூலம்