தமிழ் வளர்ச்சி துறை போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு
ஈரோடு,:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி, ஈரோட்டில் கடந்த வாரம் நடந்தது.
அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சு போட்டியில், பள்ளி அளவில், கருங்கல்பாளையம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி அ.சனாபாத்திமா, சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ர.கார்த்திக், கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி செ.காருண்யா முதல் மூன்று இடங்கள் வென்றனர். கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி த.அகல்யா, வலையாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கி.மித்ரா சிறப்பு பரிசாக, தலா, 2,000 ரூபாய் வென்றனர்.
கல்லுாரி மாணவர் போட்டியில், டி.என்.பாளையம் ஜே.கே.கே.முனிராஜா மருந்தியல் கல்லுாரி மோ.கிருபானந்தம், ஈரோடு சிக்கய்ய அரசு கலை கல்லுாரி கு.சர்வேஸ்வரன், கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் கல்லுாரி த.இலக்கியா ஆகியோர் முதல் மூன்று பரிசை வென்றனர்.
கருணாநிதி பிறந்தநாள் போட்டியில் பள்ளி அளவில், கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வெ.பிரணிதா, பட்டிமணியக்காரன்பாளையம் பா.தர்ஷினி, வலையாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வி.நா.தமிழ்க்கனி முதல் மூன்று இடங்களை வென்றனர். மொடச்சூர் நகரவை மேல்நிலைப்பள்ளி சு.நிதிஷா, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சு.நிரஞ்சன் நடராஜ் ஆகியோர் சிறப்பு பரிசாக, 2,000 ரூபாய் வென்றவர்.
கல்லுாரி அளவில் அரச்சலுார் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி க.நந்தினி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி த.ராஜேஸ்வரி, ரங்கம்பாளையம் ப.ஜோஷ்வா டேனியல் ஆகியோர் முதல், 3 பரிசை வென்றனர். இவர்களுக்கு நேற்று பரிசு வழங்கப்பட்டது. முதல், 3 இடங்களை வென்றவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் என ரொக்கப்பரிசு, சான்றிதழை கலெக்டர் கந்தசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கொசு ஒழிப்பிலும் வந்துவிட்டது ஏ.ஐ.,
-
காலிஸ்தான் பயங்கரவாதியை நாடு கடத்துகிறது அமெரிக்கா
-
நாளை வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
-
காசநோய் இறப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் தமிழகம் முன்மாதிரி
-
கிடங்கு கட்டுவதற்கு ரூ.25 லட்சம் கடன் வழங்குகிறது கூட்டுறவு வங்கி
-
கூட்டாளி வீட்டில் கோகைன் பதுக்கினோம் போலீசிடம் சிக்கியவர் வாக்குமூலம்