புதிய தாசில்தார் அலுவலகம் பென்னாகரத்தில் திறப்பு

பென்னாகரம், :வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தலைமை செயலகத்திலிருந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த நிலையில், பென்னாகரம் தாசில்தார் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது.


வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 5.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை டி.ஆர்.ஓ., கவிதா, பென்னாகரம் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, மாஜி எம்.எல்.ஏ., இன்பசேகரன், தாசில்தார் பிரசன்ன மூர்த்தி ஆகியோர் குத்துவிளக்ககேற்றி திறந்து வைத்தர். நிகழ்ச்சியில், துணை தாசில்தார் ஆறுமுகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement