நாமக்கல்லில் பஸ் மோதி பெங்களூரு காவலாளி பலி

நாமக்கல், :கர்நாடகா மாநிலம், பெங்களூரு கம்மனஹள்ளியை சேர்ந்தவர் ஸ்டானிஷ்லஸ், 64; இவர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். திருச்சியில் நடக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு, பெங்களூருவில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி செல்லும் அரசு பஸ்சில் வந்தார்.


நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் அந்த பஸ் வந்தது. தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக, ஸ்டானிஷ்லஸ் கீழே இறங்கி நடந்து சென்றார். அப்போது, ஈரோட்டில் இருந்து திருச்சி செல்வதற்காக, பஸ் ஸ்டாண்டிற்குள் அதிகவேகமாக வந்த தனியார் பஸ், ஸ்டானிஷ்லஸ் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement