வேனில் உதவியாளர் இல்லாதது ஏன்: கடலூர் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

6


கடலூர்: கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், அந்த வேனில் உதவியாளர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் சாருமதி, நிமலேஷ், செழியன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ரயில்வே கேட் ஊழியரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசும், ரயில்வேத்துறையும் நிதியுதவி அறிவித்துள்ளன.

இந்நிலையில், விபத்துக்குள்ளான வேனில் உதவியாளர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து உதவியாளர் இல்லாமல் வேனை இயக்கியது ஏன் என விளக்கம் கேட்டு அந்த பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement