சட்டக்கல்லுாரி வளாகங்களில் பல நக்சல்கள் : 50 பேர் பட்டியலை வெளியிட்டார் பா.ஜ., தலைவர்

கோல்கட்டா: கோல்கட்டா சட்டக் கல்லூரி வளாகங்களில் நக்சல்கள் பலர் உள்ளதாக, 50 பேர் கொண்ட பட்டியலை மேற்கு வங்க எதிர்கட்சி தலைவரும் பா.ஜ., தலைவருமான சுவேந்து அதிகாரி இன்று வெளியிட்டார்.
ஜூன் 25ம் தேதி இரவு தெற்கு கோல்கட்டா சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உடன் தொடர்புடைய கும்பலை சேர்ந்த மாணவ உறுப்பினர்கள் உள்ளதாக குற்றம்சாட்டி, 50 பேர் பட்டியலை வெளியிடுவேன் என்று சுவேந்து அதிகாரி கூறியிருந்தார்.
அதன்படி, இன்று 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார்.
அதில் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக சுவேந்து அதிகாரி கூறியதாவது:
திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் பிரிவுடன் தொடர்புடைய இவர்கள் அனைவரும் மாநிலத்தில் உள்ள கல்லுாரி வளாகங்களில் பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முதல்வரின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கும்பலை சேர்ந்தவர்கள். அவர்களின் அரசியல் தொடர்புகள் காரணமாக பெரும் செல்வாக்குடன் வலம் வருகின்றனர். இவர்களில் பலர் கல்லுாரிகளில் தகுதியே இல்லாமல் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.
மேலும்
-
வங்கியில் கள்ள நோட்டு 'டிபாசிட்' செய்ய முயன்ற இருவர் கைது
-
ஜவுளித்துறையில் 'பிரியதர்ஷினி' கே.கே.நகரில் ஷோரூம் திறப்பு பட்டுப்புடவைக்கு தங்கம் இலவசம்
-
நேபாளம்-சீனா எல்லையில் வெள்ளத்தில் 35 பேர் மாயம்
-
காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா
-
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
-
சிறுவன் கடத்தல் வழக்கில் 5 பேரை விசாரிக்க அனுமதி