பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பு வரவேற்பு

பிரேசிலியா: ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரேசிலியாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அல்வோராடா மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இதற்கு முன் 3 முறை பிரேசில் சென்றுள்ளார். முதலாவதாக ஜூலை 2014ம் ஆண்டில் சென்றார். அதைத் தொடர்ந்து 2019ல் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மற்றொரு பயணம், கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என 3 முறை சென்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றார். மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் மோடி, பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்கு சென்றார்.
அப்போது பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.



மேலும்
-
ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்: எப்ஏடிஎப் குற்றச்சாட்டு
-
நெல்லையில் சிறுமி கற்பழித்து கொலை : போதை காதலன் கைது
-
ராய்ட்டர்ஸ் கணக்கு முடக்கம்:' எக்ஸ்' நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
-
சட்டக்கல்லுாரி வளாகங்களில் பல நக்சல்கள் : 50 பேர் பட்டியலை வெளியிட்டார் பா.ஜ., தலைவர்
-
தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்று: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
ஏ.எஸ்.பி.,யைக் கொன்ற நக்சல் சத்தீஸ்கரில் கைது