'காற்றின் வேகம் பலம்'; வானிலை மையம் அறிவிப்பு

திருப்பூர்; வானிலை ஆய்வு மையம் மற்றும் கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூர் மாவட்டத்துக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

வரும், 13ம் தேதி வரை, திருப்பூரில், லேசான மழை துாரல் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 34 முதல், 36 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்சம், 24 முதல், 26 டிகிரி செல்சியஸ் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதம், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 30 சதவீதம் பதிவாக வாய்ப்புள்ளது.

சராசரியாக, காற்று மணிக்கு, 26 முதல், 28 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விவசாய நிலங்களில் உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்ற பயிர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். காற்று வேகமாக இருக்கும் என்பதால் மருந்து துளிகள், பிற பயிர்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம், காற்று இல்லாத சமயங்களில் மருந்து தெளிக்க வேண்டும்.

சுழற்காற்று வீசும் வாய்ப்புள்ளதால், 5 மாதங்களுக்கு மேல் உள்ள கரும்பிற்கு, தோகை உரித்து, விட்டம் கொடுக்க வேண்டும்; முட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement