அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு இ.பி.எஸ்., உறுதி

கோவை: கோவையில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொழில் அமைப்பினர், விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்தவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தங்க நகை தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோரை நேற்று, ரேஸ்கோர்ஸில் உள்ள ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பல்வேறு தரப்பினரும், தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
குறு, சிறு தொழில்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. தற்போது, தொழில் செய்ய முடியாத சூழல் நிலவுவதாக புகார்கள் வருகின்றன. கொரோனா காலத்திலும் பல்வேறு உதவிகள் செய்து, தொழில்துறையை காப்பாற்றினோம்.
இன்றைய அரசு, கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வருகின்ற பிரச்னைகளையும் தீர்ப்பதாக இல்லை. புதிதாக பிரச்னைகளை அளிக்கும் அரசாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை; நீங்களே சொல்கிறீர்கள்.
பருத்தி மகசூலை அதிகரிக்கவும், பருத்தி எடுப்பதை இயந்திரமயமாக்குவது, சீனாவைப் போல வண்ணப் பருத்தி உற்பத்தி குறித்தும் ஆய்வு செய்தோம். ஆட்சி மாற்றத்தால் அவை கைகூடவில்லை. என் ஆட்சிக் காலத்தில் ஒரு புறம் வறட்சி, ஒரு புறம் புயல் வெள்ளம், கொரோனா என பேரிடர்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் கூட நிம்மதியாக இல்லை. அவ்வளவு கஷ்டத்திலும், தொழில்துறை நலிவடையாமல் பார்த்துக் கொண்டோம்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்தோம். குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து, நீர்நிலைகளை பாதுகாத்தோம். விமான நிலைய விரிவாக்கத்தை பொறுத்தவரை, தொழில் நகரான கோவைக்கு விரிவாக்க நடவடிக்கைகள் அவசியம். எல்லாவற்றிலும் சிக்கலை ஏற்படுத்தும் தி.மு.க., அரசு, இதிலும் சிக்கலை ஏற்படுத்தியது. பணிகள் முடங்கின.
ஸ்கூட்டர் மானியம்
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், விரிவாக்கப் பணி துரிதமாக நிறைவடையும். சுய உதவி குழுவினரின் கோரிக்கை கனிவோடு பரிசீலிக்கப்படும். ஸ்கூட்டர் மானியம் மீண்டும் வழங்கப்படும். கிரில் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை, சம்பந்தப்பட்ட துறையோடு கலந்து பேசி, சாத்தியமாக்க பரிசீலிக்கப்படும்.
வரும் தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியமைக்கும். தொழில்துறையினரின் நிலைக்கட்டணம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் கனிவுடன் பரிசீலிக்கப்படும். தொழில்துறை மட்டுமின்றி, அனைத்து துறையினரின் மனதையும் குளிரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயராம், தாமோதரன், அருண்குமார், முன்னாள் மேயர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
@block_B@
தொழிற்சாலை அமைப்போம்'''அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் ஐந்து இடங்களில், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், தி.மு.க., அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாததால், திட்டங்கள் கிடைப்பதில்லை. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். அப்போது மத்திய அரசுடன் இணக்கத்தைப் பேணி, அந்த ஐந்து ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்போம்,'' என்றார் பழனிசாமி. block_B










மேலும்
-
10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
-
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித்தேரோட்டம்
-
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்
-
ஆப்பிள் நிறுவனத்தில் இந்தியருக்கு உயர்பதவி!
-
நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்